Breaking News

வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தும் பணி தொடக்கம்

சென்னை :

தமிழ்நாடு முழுவதும் 44 ஆயிரத்து 758 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தும் பணி தொடங்கி உள்ளது.  வெப்கேமரா பொருத்தப்படாத வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த முறை கூடுதலான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கொரோனா தடுப்புக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்படுகிறது. ஏற்கனவே பதட்டமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு அந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பு வசதிகள் செய்யப்படுகிறது.



மொத்த வாக்குச்சாவடிகளில் 30 சதவீதம் வாக்குச் சாவடிகளுக்கு குறையாமல் வெப்கேமரா பொருத்தும் படி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 44 ஆயிரத்து 758 வாக்குச்சாவடிகளில் பொருத்தப்படுகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தும் பணி தொடங்கி உள்ளது. கேமரா பொருத்தப்படும் வாக்குச்சாவடிகளின் வாகுப்பதிவை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தபடி நேரடியாக கண்காணிக்கலாம்.

வெப்கேமரா பொருத்தப்படாத வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெப்கேமரா பொருத்துவது மற்றும் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் மற்றும் அதிகார்கள் ஆனந்த், மணிகண்டன் ஆகியோரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments