Breaking News

சட்டவிரோதமாக மதுவிற்றவர் கைது

 குமரி, மார்ச் 25-

கன்னியாகுமரி மாவட்டம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் மாவட்ட முழுவதும் பலத்த பாதுகாப்பு மற்றும் கஞ்சா, சட்ட விரோத மது விற்பனை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் தக்கலை மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சிவசங்கரன் அவர்கள் ரோந்து அலுவலாக  மேல்புறம் பகுதியில் சென்றார் . அப்போது ஒரு வாளியை வைத்து கொண்டு சந்தேகத்திற்குகிடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார் . அப்போது அவரை பிடித்து விசாரித்த போது குழித்துறை பகுதியை சேர்ந்த சசி (53) என்பதும், அவர் அந்த பகுதியில் வாளியில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதும் தெரியவந்தது. உடனே சசி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்த 114 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

No comments

Thank you for your comments