Breaking News

கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் மநீம துணைத்தலைவராக நியமனம்- கமல்ஹாசன் இன்று அறிவிப்பு

சென்னை, மார்ச் 3:

அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றிய பொன்ராஜ், மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்தார்.



அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றிய பொன்ராஜ் மக்கள் நீதி மய்யத்தில் இன்று இணைந்தார். அவரை, மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்தார்.   



சென்னையில் இன்று பொன்ராஜ் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கமல்ஹாசன் கூறியதாவது,

நல்லவர்கள் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். இப்போது நல்லவர்கள், நாட்டுக்காக உழைத்தவர்கள், நேர்மையானவர்கள் அனைவரும் மக்கள் நீதி மய்யத்தைத் தேடி வருகிறார்கள். கலாமின் அறிவியல் ஆலோசகராக செயல்பட்ட பொன்ராஜ் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். அவர் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

கலாம் மறைந்த பிறகு, அவரது பணிகளை தொடர்ந்து செய்து, அவரது கனவை நனவாக்க தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இன்று இக்கணம் முதல் இவர் மக்கள் நீதி மய்யத்துக்காகப் பணியாற்றுவார் என்று கமல்ஹாசன் அறிவித்தார்.

No comments

Thank you for your comments