Breaking News

அதிமுகவுடன் அமித் ஷா பேசியது என்ன?.... உண்மையை உடைத்த எல்.முருகன்!

சென்னை, மார்ச் 3:

அதிமுக தலைவர்களுடன் பாஜக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய ஆலோசனை சந்திப்பில் என்ன பேசினார்?, அவர் வைத்த கோரிக்கைகள் என்ன...? என்ன..? இந்த மீட்டிங் 3 மணி நேரம் நடந்தது ஏன்? என்ற பல்வேறு சந்தேகங்களுக்கான தகவல்கள் வெளியாகி உள்ளது.



தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக எத்தனை இடங்கள் போட்டியிடும் என்பது இன்னும் புரியாத புதிராக இருக்கிறது. 40 இடங்கள் வரை கேட்டு பாஜக பிடிவாதம் பிடிப்பதால் அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுள்ளது. 

அதே சமயம் இந்த கூட்டணி பேச்சுவார்த்தை தொய்விற்கு பாஜகவின் அதிக தொகுதி கோரிக்கை மட்டும் காரணம் இல்லை. இதற்கு வேறு காரணமும் இருக்கிறது என்றும் தகவல்கள் பல்வேறு விதமாக வந்துகொண்டிகின்றனது. அதிமுக கூட்டணியில் அமமுகவை இணைக்க வேண்டும் என்று பாஜக வைத்த கோரிக்கைதான் இந்த இழுபறிக்கு காரணம். ஓபிஎஸ், இபிஎஸ் இதனால் கோபம் அடைந்த காரணத்தால் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வந்தன.

அதாவது அதிமுக கூட்டணியில் பாஜக அதிக இடங்களை கேட்டதாகவும், அதில் சில இடங்களை அமமுகவிற்கு வழங்க பாஜக திட்டமிட்டதாகவும் செய்திகள் வந்தன. கடந்த முறை பாஜகவை சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்த போது இதைத்தான் அதிமுகவுடன் பேசினார், அவர் அதிமுகவுடன் இது பற்றித்தான் ஆலோசனை நடத்தினார் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் அந்த அமித் ஷா, ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நடந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார். அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையே மூன்று மணி நேரம் சந்திப்பு நடந்தது. இதில் கூட்டணி குறித்து பேசப்பட்டது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேசப்பட்டது.

இதில் சசிகலா குறித்தோ, அமமுக குறித்தோ பேசவில்லை. அமமுக இணைப்பு, சசிகலா இணைப்பு குறித்து நாங்கள் பேச முடியாது. இதை பற்றி அதிமுகதான் முடிவு எடுக்கும். இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அதனால் அமித் ஷா இதில் எதுவும் கருத்து கூறவில்லை. அவர் கூட்டணி குறித்து மட்டுமே பேசினார், என்று எல். முருகன் விளக்கம் அளித்து இருக்கிறார்.

சசிகலா இணைப்பு தொடர்பாக அதிமுகவை பாஜக நெறுக்கியதாக நிறைய தகவல்கள் வந்த நிலையில் முருகன் அதை முற்றிலுமாக மறுத்துள்ளார். அமமுக இணைப்பு பற்றி எதுவுமே சொல்லவில்லை என்கிறார். இதனால் அதிமுக, அமமுக இணைப்பு தேர்தலுக்கு முன் சாத்தியமே இல்லை என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

No comments

Thank you for your comments