திமுகவின் மூத்த முன்னோடி கா.பா.ஆறுமுகம் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு
ஈரோடு, மார்ச் 25-
ஈரோட்டில் திமுகவின் மூத்த முன்னோடி கா.பா.ஆறுமுகம் தலைமையில் தீவிர வாக்கு சேகரித்தனர்.
ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சு.முத்துச்சாமி அவர்களுக்கு 23.03.2021 அன்று செவ்வாய்க்கிழமை காலை நசியனூர் 12வது வார்டு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட திமுக மூத்த முன்னோடி ஈரோடு கா.பா.ஆறுமுகம் அவர்களது தலைமையில் ஈரோடு நகர மன்ற முன்னாள் உறுப்பினர் சு.ராஜேந்திரன் முன்னிலையில் 12வது வார்டு சார்ந்த மெஸ் பாலு, நசியனூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் சந்தான வேலவன், ஜெகநாதன், வழக்கறிஞர் அணி ஜெகதீசன் (அட்வகேட்), நெசவாளர் பிரிவின் எஸ்.எஸ்.எஸ்.சண்முகம், ஈரோடு இளைஞரணி அமைப்பாளர் முத்துப்பாண்டி, ஐ.டி. விங் சரவணன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் திமுக கூட்டணியை சார்ந்த அனைவரும் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகளை கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார்கள்.

No comments
Thank you for your comments