கோவிட் தடுப்பூசிகளை தேர்வு செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுமதியில்லை
புதுடெல்லி, மார்ச் 2-
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளில் எதை போட்டுக்கொள்ளலாம் என தேர்வு செய்ய முடியாது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் தங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை தேர்வு செய்யலாம் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த விளக்கம் வெளியிடப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கான கோவிட் தடுப்பூசியைத் தேர்வு செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.இந்த செயல்முறை முழுமையாக அரசின் கோ-வின் (CoWIN)
அமைப்பு மூலம் முழுமையாக செய்யப்படும் என்று சுகாதார அமைச்சகம் திங்களன்று தெளிவுபடுத்தியது. உச்சநீதிமன்றத்திற்குள் இருக்கும் அரசாங்க மருந்தகத்தில் தடுப்பூசி போட்டுகொள்ளலாம் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. கோவின் மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும்
நாடு முழுவதும் நேற்று இரண்டாம் கட்டமாக 60 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ள 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. இதற்காக கோவின் செயலி மற்றும் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோவின் செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியவில்லை. செல்போன் எண்ணை பதிவு செய்தால், அதற்கு ஓடிபி வரவில்லை என பலர் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கோவின் செயலி முடக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட விரும்புவோர், கோவின் இணையதளம் (http://cowin.gov.in)
மூலமாக மட்டுமே பதிவு செய்துகொள்ளவேண்டும். கோ-வின் செயலியில் பயனர்கள் பதிவு செய்ய முடியாது. பிளே ஸ்டோரில் உள்ள கோ-வின் செயலியை இப்போது நிர்வாகிகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments
Thank you for your comments