Breaking News

பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய விவசாய சங்கங்கள் முடிவு...!

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 
பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய விவசாய சங்கங்கள் முடிவு

புதுடெல்லி, மார்ச் 2:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளன. செவ்வாய்கிழமை நடந்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) பொதுக்குழு கூட்டத்தில், தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கும் விவசாயிகள் குழுவை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.‘

We'll send teams to poll-bound states -- to West Bengal and Kerala. We will not support any party but appeal to people to vote for the candidates who can defeat BJP. We will tell people about Modi govt's attitude towards farmers: Balbir S Rajewal, Bhartiya Kisan Union : 6:17 PM · Mar 2, 2021Twitter Web App

"அவர்கள் எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் ஆதரவைக் கேட்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பார்கள்.மோடி அரசாங்கம் விவசாயிகளை நியாயமாக நடத்துவதில்லை என்றுஅவர்கள் மக்களுக்குச் சொல்வார்கள். மேலும் பாஜகவின் பிரச்சாரத்தை எதிர்ப்பார்கள்" என்று பாரதிய கிசான் யூனியனின் தனது சொந்த பிரிவின் தலைவரான மூத்த பஞ்சாப் விவசாய தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கூறினார்.

"இந்த அரசாங்கம் தேர்தல்கள், வாக்குகள், வெற்றி பெரும் இடங்கள் ஆகியவற்றை மட்டுமே புரிந்துகொள்கிறது. எனவே நாங்கள் வாக்கெடுப்புக்கு உட்பட்ட ஐந்து மாநிலங்களுக்கும் செல்வோம்,” என்று ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ் கூறினார்.

‘‘மார்ச் 12 ம் தேதி, கொல்கத்தாவில் நடைபெறும் விவசாயிகள் பேரணியில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர்கள் பங்கேற்கும் போது, மாநிலத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் எங்கள் வாகனங்கள் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடும். விவசாயிகளுக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிப்போம்’’ என்று யோகேந்திர யாதவ் தெரிவித்தார்.

திங்களன்று தொழிற்சங்கத் தலைவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, மார்ச் 15ம் தேதி தனியார்மயமாக்கல் மற்றும் கார்ப்பரேட்மயமாக்கலுக்கு எதிராக நடைபெறவுள்ள பத்து மத்திய தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு  ஆதரவளிப்பதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.

வரும் மார்ச் 6ம் தேதி டில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் துவங்கி 100 நாள் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு டில்லியின் எல்லைகளில் மேற்கு புற அதிவேக நெடுஞ்சாலை அல்லது குண்ட்லி-மானேசர்-பல்வால் அதிவேக நெடுஞ்சாலையை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து மணி நேரம் தடுக்க திட்டமிட்டுள்ளனர். தலைநகரைச் சுற்றியுள்ள ஆறு வழிச்சாலையானது சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூரில் உள்ள முக்கிய எல்லை போராட்ட இடங்களை இணைக்கிறது.

மேலும் மார்ச் 6ம் தேதி நாட்டின் பிற பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் தங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் கறுப்புக் கொடிகளை ஏற்ற கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர். விவசாயிகள் தங்கள் ஆடைகளில் கறுப்பு கொடுகளை அணிந்து அன்றைய தினத்தை ஒரு கருப்பு நாளாகக் அனுசரிப்போம் என்று எஸ்.கே.எம் தலைவர்கள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சந்தைகளில் தங்கள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உண்மையில் பெறவில்லை என்பதைக் காண்பிப்பதற்காக எஸ்.கே.எம் "எம்.எஸ்.பி திலாவ் அபியான்" என்ற பிரச்சாரத்தை தொடங்கும். இந்த பிரச்சாரம் கர்நாடகாவில் மார்ச் 5ம் தேதி தொடங்கி, பின்னர் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு தொடரும் என்று யாதவ் கூறினார்.

No comments

Thank you for your comments