ராணுவ தளத்தில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு!
மலாபோ, மார்ச் 8-
கினியா நாட்டின் ராணுவ தளத்தில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிக்கி 17 பேர் கொல்லப்பட்டனர்.
கினியா நாட்டின் ராணுவ தளத்தில் டைனமைட் என்ற வெடிபொருள் திடீரென தொடர்ச்சியாக வெடித்துள்ளது. சக்திவாய்ந்த இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 17 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக கினியா அதிபர் டியோடோரா ஓபியாங் கூறுகையில், டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தும்பொழுது பாதுகாப்பு விஷயங்களை கவனத்தில் கொள்ளவில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து, ஈடுபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்டுகப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணை முட்டும் அளவுக்கு தீ எரிந்த நிலையில் தீயணைப்பு துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் தாக்குதலில் படுகாயமடைந்த மக்களுக்கு அதிகளவிலான ரத்தம் தேவைப்படுவதாக உள்ளூர் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த மக்களை கொத்து கொத்தாக லாரிகளில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
No comments
Thank you for your comments