குமரியில் போலீஸார் கொடி அணிவகுப்பு
கன்னியாகுமரி, மார்ச் 25-
குமரி மாவட்டம், சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது
கன்னியாகுமரி மாவட்டம் 2021-சட்டமன்ற பொதுத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அச்சமின்றி வாக்களிக்கவும், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும் நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வேணுகோபால் அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு (FLAG MARCH) ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலம் துவரங்காடு தொடங்கி மணத்தட்டை வரை நடைபெற்றது. மேலும் இதில் நாகர்கோவில் உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள் 4 பேரும், உதவி ஆய்வாளர்கள் 8 பேரும், காவல் ஆளினர்கள் 177 பேரும், துணை ராணுவ படையினர் 55 பேர் உட்பட மொத்தம் 245 பேர் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
*******

No comments
Thank you for your comments