Breaking News

பெண்களின் சாதனைகளால் பெருமை கொள்கிறது இந்தியா- பிரதமர் மோடி மகளிர் தின வாழ்த்து

புதுடெல்லி, மார்ச் 8:

நம் தேசத்து பெண்களின் பல சாதனைகளால் இந்தியா பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

சர்வதேச மகளிர் தினத்தன்று எங்கள் அழியாத சக்திகளுக்கு (பெண்கள்) வணக்கம். நம் தேசத்து பெண்களின் பல சாதனைகளால் இந்தியா பெருமை கொள்கிறது. பரந்த அளவிலான துறைகளில் பெண்கள் அதிகாரம் பெறும் வகையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெற்றது நமது அரசாங்கத்துக்கு கிடைத்த கவுரவம். இவ்வாறு மோடி கூறி உள்ளார்.

No comments

Thank you for your comments