Breaking News

காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.


தமிழக சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதை அடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட பலர் வாய்ப்பு கேட்டு கடுமையான நெருக்கடி கொடுத்ததால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் ஒரு வழியாக வேட்பாளர் பட்டியலை தயார் செய்து டெல்லியில் உள்ள கட்சி தலைமைக்கு அனுப்பினர்.

இந்நிலையில் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டதையடுத்து, வேட்பாளர் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் நடந்து இருப்பதாக கூறி விஷ்ணு பிரசாத் எம்.பி. காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வேட்பாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று ஜோதிமணி எம்பியும் கருத்து தெரிவித்தார்.


இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கிய 25 தொகுதிகளில் முதல் கட்டமாக 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மக்களவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் எச். வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட உள்ளார்.

21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் விவரம்:-

பொன்னேரி- துரை சந்திரசேகர்,

ஸ்ரீபெரும்பதூர்- கே செல்வபெருந்தகை

சோளிங்கர்- முனிரத்தினம்

ஊத்தங்கரை- ஆறுமுகம்

கள்ளக்குறிச்சி- மணிரத்தினம்

ஓமலூர்- மோகன் குமாரமங்கலம்

ஈரோடு (கிழக்கு)- திருமகன் ஈவெரா

உதகமண்டலம்- ஆர்.கணேஷ்

கோயம்புத்தூர் (தெற்கு) : மயூரா எஸ் ஜெயக்குமார்

உடுமலைப்பேட்டை- தென்னரசு

விருதாசலம்- ராதாகிருஷ்ணன்

அறந்தாங்கி-ராமச்சந்திரன்

காரைக்குடி- மங்குடி

மேலூர்- ரவிசந்திரன்

ஸ்ரீவல்லிபுத்தூர்- மாதவ ராவ்

சிவகாசி- அசோகன்

திருவாடனை- கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம்-ஊர்வசி அமிர்தராஜ்

தென்காசி – பழனி

நாங்குநேரி- ரூபி மனோகரன்

கிள்ளியூர்- ராஜேஷ்குமார்

மக்களவை தொகுதி இடைத்தேர்தல்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் – விஜய் வசந்த்


விளவங்கோடு உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.




INC COMMUNIQUE Important Notification regarding candidates for Tamil Nadu elections
Image


No comments

Thank you for your comments