இந்தியாவில் மரபணு மாறிய புதியவகை கொரோனா கண்டுபிடிப்பு
புதுடெல்லி, மார்ச் 25-
இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது
இந்தியாவில் உள்ள கொரோனா வைரஸ்களின் மரபணுக்களை தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக இன்சாகோக் (INSACOG-Indian SARS- COV-2 genomic consortia) நிறுவனங்கள் 12 இணைந்து இயங்கி வருகின்றன.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை சோதனை செய்ததில் மரபணு மாறிய புதிய வகையிலான கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தவிர, இந்தியா முழுவதும் 18 மாநிலங்கள் யூனியன் பிரேதேசங்களில் மரபணு மாறிய புதிய வகையிலான கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தகைய பிறழ்வுகள் நோயெதிர்ப்பு மூலம் தப்பித்தல் மற்றும் அதிகரித்த தொற்றுநோயை வழங்குகின்றன. இந்த பிறழ்வுகள் சுமார் 15-20 சதவீத மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பகிர்ந்துள்ள மொத்தம் 10,787 நேர்மறை மாதிரிகளில் 771 மரபணு மாறிய புதிய வகையிலான கொரோனா கண்டறியப்பட்டுள்ளன.736 மாதிரிகள் இங்கிலாந்தின் வைரஸ்களுக்கு (பி .1.1.7) பரம்பரையை சேர்ந்தவை.34 மாதிரிகள் தென்னாப்ரிக்கா பரம்பரையை சேர்ந்தவை. இந்த புதிய வகை கொரோனா குறித்த ஆய்வுத் தகவல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் புதிய வகை கொரானோ வைரஸ் பரவி இருப்பதாக இந்திய அறிவியல் நிபுணர்கள் தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாக கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம் புதன் கிழமை (24-03-2021) அறிவித்தது.
இந்தியாவில் பரவி உள்ள புதிய வகை கொரானோ வைரஸ் மரபணு குறித்து அவர்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார்கள் இந்த ஆய்வு முடிவுகளை இன்சாகோக் அமைப்பு மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பரவி உள்ள கோரானா வைரஸ் புதிய வகையை சேர்ந்தது என்று அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
இந்தியாவிற்கு ஐ.நா. பாராட்டு
ஆப்கானிஸ்தான் இலவசமாக கொரோனா தடுப்பு ஊசி மருந்துகளை இந்தியா வழங்கியதற்கு ஐநா அமைப்பின் பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரானோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு ஆன்டிபாடிஸ் ஓராண்டு காலம் உடலில் தங்கி இருக்கிறது சிலருக்கு ஒரு சில நாட்களிலேயே ஆன்டிபாடிஸ் உடலில் இல்லாமல் போய்விடுகிறது.
தோற்று எந்த அளவுக்கு கடுமையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நோயாளிகளின் உடலில் ஆன்டிபாடி நீண்ட நாளைக்கு தங்குகிறது என்று லேன்செட் மைக்ரோப் ஜர்னல் கட்டுரை வெளியிட்டுள்ளது.
புதிய கொரோனா தொற்று
புதன்கிழமை அன்று மட்டும் புதிதாக 47 ஆயிரத்து 262 கொரானோ வைரஸ் தொற்றுக்கள் சோதனைக்குப் பின் உறுதி செய்யப்பட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டில் இதுவரை ஒரே நாளில் இந்த அளவுக்கு புதிய தொற்றுக்கள் உறுதி செய்யப்படவில்லை. புதன்கிழமை கொரானோ வைரஸ் எண்ணிக்கை புதிய உயர்ந்த பட்ச அளவை எட்டியுள்ளது.
அகில இந்திய அளவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 11734058 ஐ எட்டியுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 14 நாட்களாக தொடர்ந்து கொரானோ வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத் தகுந்தது. அகில இந்திய அளவில் சிகிச்சை பெரும் நோயாளிகள் எண்ணிக்கை 368457 ஆக உயர்ந்துள்ளது இது ஒட்டுமொத்த வைரஸ் தொற்றுக்கள் அளவில் 3.14 சதவீதமாகும் சிகிச்சைக்குப் பிறகு குணமடையும் நோயாளிகளின் அளவு 95.49 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் புதன்கிழமை காலை 8 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
பிரபல இந்தி நடிகர் அமீர்கான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். அமீர்கானுக்கு 56 வயதாகிறது.
கடந்த நாட்களில் தன்னுடன் பழகிய அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சொதனை செய்துக்கொள்ளும்படி அமீர்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments
Thank you for your comments