அதிக எடையுடன் நடக்கமுடியாமல் அவதிபட்டுவந்த குரங்கு மீட்பு..!
பேங்காக்:
தாய்லாந்தில் உடல்பருமனால் அவதிப்பட்டுவந்த குரங்கு வனத்துறையினரால் மீட்கப்பட்டு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பேங்காக் நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின்பூரி மாவட்டத்தில் உள்ள சந்தை ஒன்றில், பொதுமக்கள் வழங்கும் உணவுகளை சாப்பிட்டு, 20 கிலோ எடையுடன் நடக்கமுடியாமல் அவதிப்பட்டுவந்த காட்சில்லா எனப்படும் குரங்கை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
மூன்று வயதான காட்சில்லா, சாதாரண குரங்கின் எடையைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. அந்த குரங்கை பிடித்த வனத்துறையினர் தேசிய பூங்காவுக்கு அனுப்பித்துள்ளனர்.
அங்கு அதற்கு உணவு கட்டுப்பாட்டுடன், உடற்பயிற்சி வழங்கப்பட்டு உடல் எடை சீரனாதும் வனத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

No comments
Thank you for your comments