Breaking News

இபிஎஸ், ஓபிஎஸ் தீவிர ஆலோசனை... அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை 8ஆம் தேதி வெளியிட திட்டம்!

 சென்னை, மார்ச் :

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்  தீவிர ஆலோசனை நடத்தினார்கள். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அதிமுக இறங்கியுள்ளது.  



தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுகின்றன.



கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்தும் தேர்தல் அறிக்கை தொடர்பாகவும் நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜனதா, தே.மு.தி.க., த.மா.கா. மற்றும் சிறு, சிறு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.

இதற்கிடையே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது. அ.தி.மு.க.வில் தற்போது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதையடுத்து 4&ந்தேதி நேர்காணல் நடத்தி வருகிற 8&ந்தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

No comments

Thank you for your comments