அமமுக அணியில் தேமுதிக - 60 தொகுதிகள் ஒப்பந்தம்
சென்னை:
தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன், அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க., தங்களுக்கு பா.ம.க.வுக்கு இணையாக தொகுதிகளை ஒதுக்காததால், கூட்டணியில் இருந்து கடந்த 9ம் தேதி வெளியேறியது. அதன்பிறகு மாற்று கூட்டணி குறித்து தே.மு.தி.க. தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதும் முதலில் தி.மு.க.வுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் தி.மு.க. அணியில் தொகுதி உடன்பாடு முடிந்துவிட்டதால் தே.மு.தி.க.வால் அங்கு செல்ல முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதேசமயம் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கருத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் உறுதியாக இருந்தனர். இதனால் அமமுகவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து அமமுக தலைமையிலான அணியில் இன்று தேமுதிக இணைந்துள்ளது. அமமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன், அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் ஆகியோர் கையெழுத்திட்டனர். தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.
கூட்டணி உறுதியாகி, தொகுதி பங்கீடு செய்யப்பட்டதை அடுத்து, தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அமமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 கும்மிடிப்பூண்டி(1)
2 திருத்தணி(3)
3 ஆவடி(6)
4 வில்லிவாக்கம்(14)
5 திரு.வி.க.நகர் (தனி)(15)
6 எழும்பூர் (தனி)(16)
7 விருகம்பாக்கம்(22)
8 சோழிங்கநல்லூர்(27)
9 பல்லாவரம்(30)
10 செய்யூர் (தனி)(34)
11 மதுராந்தகம் (தனி)(35)
12 கே.வி. குப்பம் (தனி)(45)
13 ஊத்தங்கரை (தனி)(51)
14 வேப்பனஹள்ளி(54)
15 பாலக்கோடு(57)
16 பென்னாகரம்(58)
17 செங்கம் (தனி)(62)
18 கலசப்பாக்கம்(65)
19 ஆரணி(67)
20 மயிலம்(71)
21 திண்டிவனம் (தனி)(72)
22 வானூர் (தனி)(73)
23 திருக்கோவிலூர்(76)
24 கள்ளக்குறிச்சி (தனி)(80)
25 ஏற்காடு ST(83)
26 மேட்டூர்(85)
27 சேலம் மேற்கு(88)
28 நாமக்கல்(94)
29 குமாரபாளையம்(97)
30 பெருந்துறை(103)
31 பவானிசாகர் (தனி)(107)
32 கூடலூர் (தனி)(109)
33 அவிநாசி (தனி)(112)
34 திருப்பூர் வடக்கு(113)
35 வால்பாறை (தனி)(124)
36 ஒட்டன்சத்திரம்(128)
37 நிலக்கோட்டை (தனி)(130)
38 கரூர்(135)
39 கிருஷ்ணராயபுரம் (தனி)(136)
40 மணப்பாறை(138)
41 திருவெறும்பூர்(142)
42 முசிறி(145)
43 பெரம்பலூர் (தனி)(147)
44 திட்டக்குடி (தனி)(151)
45 விருத்தாச்சலம்(152)
46 பண்ருட்டி(154)
47 கடலூர்(155)
48 கீழ்வேளூர் (தனி)(164)
49 பேராவூரணி(177)
50 புதுக்கோட்டை(180)
51 சோழவந்தான் (தனி)(190)
52 மதுரை மேற்கு(194)
53 அருப்புக்கோட்டை(207)
54 பரமக்குடி (தனி)(209)
55 தூத்துக்குடி(214)
56 ஒட்டபிடாரம் (தனி)(217)
57 ஆலங்குளம்(223)
58 இராதாபுரம்(228)
59 குளச்சல்(231)
60 விளவன்கோடு(233)
No comments
Thank you for your comments