Breaking News

பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு- ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: 

அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பாஜகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பாஜகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர்  இன்று டுவிட்டரில் கூறியுள்ளதாவது,

நடைபெறவுள்ள  2021 - சட்டமன்ற பொதுத்தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். 


O Panneerselvam
4 hours ago

நடைபெறவுள்ள 2021 - சட்டமன்ற பொதுத் தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! #TNElections2021 #AIADMKFOR2021

1.4K
187
113






No comments

Thank you for your comments