Breaking News

பெண் டாக்டர் கொடுத்த புகார் மனுவை மகளிர் போலீஸார் வாங்க மறுப்பு!- 1 மணி நேரம் திடீர் பரபரப்பு

வேலூர், மார்ச் 26-

வளர்ப்பு தந்தையும், அவரது மகனும் தனக்கு செக்ஸ் டார்ச்சர் செய்வதாக பெண் டாக்டர் கொடுத்த புகாரை வாங்க அனைத்து மகளிர் போலீஸார் மறுத்ததால் அங்கு 1 மணி நேரம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


வேலூர் அடுத்த காட்பாடி விருதம்பட்டு பிடபள்யூடி நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஜூடி ஹெஸ்டிமா. இவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரை வளர்ப்பு மகளாக எடுத்து வளர்த்தவரும், அவரது மகனும் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக தெரியவந்துள்ளது.



 இதுகுறித்து நேற்று மாலை 6 மணிக்கு வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த மருத்துவர் ஜூடி ஹெஸ்டிமா ஆங்கிலத்தில்  3 பக்கங்களில் புகார் மனுவை எழுதி கொடுத்தார். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த 2 மகளிர் போலீஸார் புகார் மனுவை வாங்க மறுத்து விட்டனர். வீட்டில் இருப்பவர்கள் மாத்திரை கொடுத்து அவரை மனநலம் பாதித்தவராக சித்தரித்து வருவதாகவும், செக்ஸ் டார்ச்சர் செய்வதாவும் புகார் மனு கொடுத்திருந்தார். அதாவது வளர்ப்பு தந்தை மற்றும் அவரது மகனும் இந்த செக்ஸ் டார்ச்சர் செய்வதாக அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்டு சிஎஸ்ஆர் கூட தரவில்லை.ஆனால் அந்த புகார் மனுவை கிழித்து எறிந்து விட்டனர். 



அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த பிரச்னை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்தது. ஆனால் அதுவரை அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் கடைசிவரை காவல் நிலையத்துக்கு வரவே இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த மருத்துவர் ஜூடி ஹெஸ்டிமா காவல் நிலையத்தில் இருந்த சுவற்றில் ஏறி நின்று ரகளையில் ஈடுபட்டார். இதனால் அவரை மனநலம் பாதித்தவர் என்று அவரது வளர்ப்பு தந்தை தெரிவித்தார். அத்துடன் 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்து வரவழைத்தனர். 

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு தெரிவித்த அந்த பெண் மருத்துவர் இந்த கழிஞ்சூர் தேவாலயத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் செக்ஸ் டார்ச்சர் நடத்து வருகிறது. இது என்னோடு மண்ணாக மண்ணாக போய் விடக் கூடாது. வெளியில் தெரிய வேண்டும் என்று புகார் கொடுக்க வந்தால் புகாரை வாங்க மறுத்ததோடு மட்டுமின்றி விசாரிக்கவும் இல்லை, சிஎஸ்ஆர் போடவில்லை. புகார் மனுவையும் கிழித்து எறிந்து விட்டனர் என்று ஆவேசமாக கூறினார். 



இந்த ஆவேசமாக அவர் பேசுவதை தடுப்பதிலேயே காவலர்களும், அவரது வளர்ப்பு தந்தையும் குறியாக இருந்தனர். அந்த தேவாலயத்தில் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து தவறான நடவடிக்கைள் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அத்துடன் அந்த தேவாலயத்தில் என்னமோ மர்மம் நடக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. இதையே அங்கு கூடியிருந்த சில பெண்களும் தெரிவித்தனர். 

அதற்குள்ளாக அந்த பெண் மருத்துவர் இரண்டு நாட்களாக மாத்திரை போடவில்லை, இதனால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறி ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை ஏற்றி அனுப்பி விட்டனர். இதுபோன்ற நிகழ்வு 4 மணி நேரம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதில் என்ன மர்மம் அடங்கியுள்ளது என்பதை விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிஉலகுக்கு வரும் என்பது மட்டும் நிதர்சனம். இந்த சம்பவத்தால் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 4 மணி நேரம் திடீர் பதட்டம் நிலவியது குறிப்பிடத்தக்கது. 

பொல்லாச்சி போன்ற சம்பங்கள் ஏதேனும் நடைபெறுகிறாதா என்ற பெருத்த கேள்வியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் டாக்டர் கூறியதாவது, இயேசு என்ற பெயரை தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் பகிரங்கமாக கூறியுள்ளார். உண்மை என்னவென்று காவல்துறையே விசாரனை மேற்கொள்ள வேண்டும்... 

No comments

Thank you for your comments