வேலூர் மாவட்ட தொகுதிகளில் 12.71 லட்சம் வாக்காளர்கள்
வேலூர், மார்ச் 25-
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 தேதியினை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது நீக்குவது குறித்து அறிவுரைகள் வழங்கியுள்ளது.
அதன்படி 20.01.2021 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தவறியவர்கள், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய வேண்டியவர்கள் முறையே படிவம்-6, படிவம்-8, படிவம்-8ஏ அளித்து பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இறப்பு மற்றும் முகவரி மாற்றத்தில் சென்றவர்களிடம் படிவம்-7 பெறப்பட்டது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 20.01.2021 முதல் பெறப்பட்ட படிவங்கள் 6, 8, 8ஏ மற்றும் 7 ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பதிவு அலுவலரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் துணை பட்டியல் 2-ல் கீழ்க்கண்டவாறு பெயர் சேர்த்தல் / நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சேர்த்தல் / திருத்தம் மற்றும் நீக்கல் செய்யப்பட்ட பின்பு வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளின் வாக்காளர்கள் விவரம்
No comments
Thank you for your comments