குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000-திமுக அசத்தலான அறிவிப்பு
அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி
திருச்சி, மார்ச் 7:
தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுகவின் பிரமாண்ட தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் சிறுகனூரில் 07-03-2021அன்று துவங்கியது.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் 07-03-2021 தேதி காலை 11.30 மணியளவில் திருச்சி வந்தார்.
![]() |
விமான நிலையத்தில் கே.என். நேரு தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதியம் 1 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு ஸ்டாலின், வந்தார். அங்கு நுழைவாயிலில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார்.
திருச்சி மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் திமுகவினர் தென்பட்டனர். இந்நிலையில் 5.30 மணியளவில் மீண்டும் மு.க. ஸ்டாலின் கூட்ட அரங்குக்கு வந்தார். கூட்டத்தில் நடுவில் அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் நடந்து மக்களை நெருங்கிச் சென்று சந்தித்தார். நடைமேடையின் 3 புறங்களிலும் திரண்டிருந்த மக்களின் வாழ்த்துக்களை கையசைத்து ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்துக்கான எனது கனவுகளை அறிவிக்கும் கூட்டம் தான் இந்த மாநாடு. தேர்தலில் போட்டியிட திமுக முதல் முறையாக முடிவு செய்த இடம்தான் திருச்சி மாநகரம். திருச்சியில் எடுத்த முடிவை அடுத்துதான் தமிழகத்தில் 5 முறை திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.
திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது. நவீன தமிழகத்தை திமுக ஆட்சிதான் கட்டமைத்தது; அதனை அதிமுக ஆட்சி சீர்குலைத்தது. வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 6ம் தேதி அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது என கூறினார்.
ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்
இதனை தொடர்ந்து ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற தலைப்பில் தொலைநோக்கு திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவை ஆகும்.
*குடிமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்குவதை உறுதி செய்வோம்.
*நாளொன்றுக்கு வீணாகும் தண்ணீர் அளவினை 50%-லிருந்து 15% ஆக குறைத்தல்
* பசுமை பரப்பளவை 20.27 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்துதல், 7.5 இலட்சம் ஹெக்டேர் நிலங்களைக் கூடுதலாக இணைத்தல்
* வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு மகசூல் பெருக்கும் மகிழும் விவசாயி.
*குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் வழங்கப்படும்.
*அனைவருக்கும் உயர்நிலை கல்வி மற்றும் உயர்தர மருத்துவம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
*எழில்மிகு மாநகரங்களின் மாநிலமாக தமிழகம் திகழும். உயர்தர ஊரக கட்டமைப்பு உயர்ந்த வாழ்க்கை தரம் உருவாக்கப்படும்.
*அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்; குறிப்பாக, ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் சரிபாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் அமைப்போம்.
![]() |
* பட்டியலினத்தவர் - பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித் தொகையை இருமடங்கு உயர்த்தி வழங்குதல்.
* மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவை முற்றிலுமாக ஒழித்தல்.
இவ்வாறு, திமுக தலைவர் ஸ்டாலின் தனது உறுதிமொழியில் அறிவித்துள்ளார்.





No comments
Thank you for your comments