Breaking News

இடைக்கால பட்ஜெட் தாக்கல்

துறை ரீதியான நிதி ஒதுக்கீடுசென்னை, பிப்.24-

கலைவாணர் அரங்கத்தில் செவ்வாய் கிழமை (23.02.2021) அன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், 2021&2022ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம்.

கடந்த 5ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்த நிலையில், கூட்டம் நிறைவடைந்தது. இந்நிலையில், 2021&2022ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை செவ்வாய் கிழமை (23.02.2021) மீண்டும் கூடியது. 

எதிர்கட்சிகளின் கணிப்புகளை பொய்யாக்கி 5 வருடங்களை அதிமுக அரசு பூர்த்தி செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உலக அளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளது என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முதலுரையில் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைக்க மத்திய அரசுக்கு பட்ஜெட் உரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாட்டிற்கான 2021&22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு& செலவுத் திட்ட மதிப்பீட்டை 11வது முறையாக தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

சத்துணவுத் திட்டத்திற்கு 2021&22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு & செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.1953.98 கோடி ஒதுக்கீடு!. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை உயர்வு. 2021&22ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக ரூ.1,932 கோடி ஒதுக்கீடு. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181 கோடி நிதி ஒதுக்கீடு! மதிய சத்துணவுத் திட்டத்திற்காக ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு. 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ. 3016 கோடி நிதி ஒதுக்கீடு. சாலைகளை மேம்படுத்த நெடுஞ்சாலைத்துறைக்கு   ரூ.18,750 கோடி நிதி ஒதுக்கீடு!. அம்மா கிளினிக்குகளுக்காக ரூ. 144 கோடி ஒதுக்கீடு. மின்கட்டண மானியங்களுக்காக ரூ.8834.68 கோடி ஒதுக்கீடு. மாற்று திறனாளிகள் துறைக்கு 688 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. மீன்வளத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.580.97 கோடி ஒதுக்கீடு. 43 புதிய மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கும் தளங்கள் மற்றும் உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.1,374.64 கோடி ஒதுக்கீடு. 2021&22ம் ஆண்டில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் நிதியாக ரூ.3,548 கோடி ஒதுக்கீடு. பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் (நகர்புறம்) ரூ.3,700 கோடி ஒதுக்கீடு

காவல்துறையை நவீனமயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு, காவல்துறைக்கு வரும் நிதியாண்டிற்கு ரூ.9567.93 கோடி ஒதுக்கீடு. தீயணைப்புத்துறைக்கு ரூ.436.68 கோடி ஒதுக்கீடு. நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1,437.82 கோடி ஒதுக்கீடு 2021 & 22ஆம் நீதி நிர்வாகத் துறையில் புதிய நீதிமன்றக் கட்டடங்களைக் கட்டுவதற்காக ரூ.289.78 கோடி ஒதுக்கீடு &3.8 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.13,365 கோடி செலவீடு செய்யப்பட்டள்ளது. தமிழ்நாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட மொத்த உள்ளாட்சி அமைப்பு மானியத் தொகை, 2020&21ம் ஆண்டில் ரூ.5,344 கோடி ரூபாயாக இருந்தது; இது 2021&22ம் ஆண்டில் ரூ.3,979 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1738.81 கோடி ஒதுக்கீடு. பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தை அமைக்க விரிவான சாத்தியக் கூறு அறிக்கை ஆய்வு. 2019 உலக முதலீட்டாளர் மாநாட்டில் இருந்து இன்று வரை கையெழுத்திடப்பட்டவற்றில் 89% திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 81 திட்டங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. 191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பட்டில் உள்ளன.

No comments

Thank you for your comments