Breaking News

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு நாளை கூடுகிறது.... தனித்து போட்டியா?

சென்னை:  

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை நடைபெறுவதாக அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.



மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,  மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். உறுப்பினர்கள் அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில் தங்கி இருக்கும்படி வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியா? அல்லது கூட்டணியில் போட்டியா? என்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Thank you for your comments