மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு- அதிர்ச்சி சுகாதாரத்துறை செயலாளர் திட்டவட்டம்!
சென்னை, பிப்.24-
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது போல தமிழகத்திலும் நடக்குமென்று சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் 449 பேர் வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், பாதிப்பு அடைந்தவர்களுடைய எண்ணிக்கை 848,274-ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,32,167 ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை கொரோனாவில் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,466 ஆக அதிகரித்து இருக்கிறது. இத்தகைய சூழலில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சில வாரங்களாக தொற்று 450க்கும் குறையாமல் இருந்து வருகிறது என்பது தற்போது அறியப்பட்டுள்ளது. நாம் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் முக கவசம் அணிதல் போன்றவற்றை மக்கள் சரிவர கடைபிடிப்பதில்லை. கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்களுக்கு குறைந்து விட்டது. இதனால் எச்சரிக்கையுடன் இருக்க மாறுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு போடப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments