மணல் கடத்தலை தடுக்க நீதிமன்ற உத்தரவை நடைமுறை படுத்துங்கள்
மதுரை, பிப்.25-
தமிழகத்தில் மணல் கடத்தலைத் தடுப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவை முறையாக, கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வலியுறுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் சட்ட விரோத மணல் கடத்தலை தடுப்பது தொடர்பாக தமிழக அரசின் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு .
உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு, பொன்னமராவதி தாலுகா நெறிஞ்சிக்குடி, சேரனூர், சித்தூர், கூடலூர், கார சூராம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் இணைந்து மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, கடிதம் ஒன்றை அனுப்பினர். அதனடிப்படையில், நீதிமன்றம் தாமாக முன் வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு, "தமிழகத்தில் மணல் கடத்தலைத் தடுப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவை முறையாக, கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டவிரோத மணல் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். தமிழக தலைமைச் செயலர் சிறப்பு கவனம் செலுத்தி இந்த விவகாரத்தை கண்காணிக்க வேண்டும். இது பொது வள ஆதாரம் தொடர்பான விவகாரம். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் தமிழக தலைமை செயலர் நீதிமன்றத்தில் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

No comments
Thank you for your comments