மோடிக்காக காரோட்டியாக மாறிய மெக்சிகோ அதிபர்!
மெக்சிகோ, ஜூன் 9-
பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா,
மெக்சிகோ என ஐந்து
நாடுகள் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட மோடி, தனது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதியாக மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளார்.
நாடுகள் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட மோடி, தனது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதியாக மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்
தொடர்ந்து அந்நாட்டு அதிபர் என்ரிக் பினா நீட்டோ, மோடிக்கு இரவு
விருந்தளித்தார். இதற்காக நீட்டோவே தனது காரில் மோடியை உணவகத்திற்கு
அழைத்துச் சென்றார். அந்தக் காரை அதிபர் என்ரிக்கே ஓட்டிச் சென்றுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் பிரதமர் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments