பாரீஸ் குண்டுவெடிப்பில் வெடித்து சிதறிய தீவிரவாதி
பிரான்ஸ், ஏப்.26-
இந்த சம்பவத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி Salah Abdeslam என்பவர் கைது செய்யப்பட்டு, இது தொடர்பான விசாரணை அவரிடம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நவம்பர் 13 ஆம் தேதி உணவகம் ஒன்றிற்கு
பாரீஸில் உள்ள உணவகம் ஒன்றிற்கு உள்ளூர் நேரப்படி இரவு 9.40 மணியளவில் இத்தீவிரவாதி செல்கிறார்.
அங்கு அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில், ஒருவித படபடப்புடன் தனது முகத்தினை மறைத்துக்கொண்டு, காலியாக உள்ள மேஜையினை நோக்கி விரைகிறார்.
இவர், அங்கு சென்ற மறுநொடியில், மின்னல் வேகத்தில் வெடித்து சிதறுகையில், இவரது உடல் இரண்டு பாகங்களாக பிரிவதை காண முடிகிறது.
உணவருந்த வந்த மற்ற நபர்கள், சிறுவித காயங்களுடன் அலறியவாறு அங்கிருந்து தப்பித்து ஓடுகின்றனர்.
தற்போது இந்த வீடியோ, இது குழந்தைகளுக்கு பொருத்தமான வீடியோ கிடையாது என்ற எச்சரிக்கையுடன் ZoneInterdite என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இச்சம்பத்தில் ஈடுபட்ட தீவிரவாதியின் பெயர் Brahim Abdeslam(31). இவர் பாரீஸ் தாக்குதலின் முக்கிய குற்றவாளியான Salah Abdeslam - இன் சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments