மகாராஷ்டிராவில் வரலாறு காணாத வறட்சி
மகாராஷ்டிரா, ஏப்.20-
மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு வறட்சி நிலவுகிறது. அவுரங்காபாத், பீத், ஒஸ்மானாபாத், லத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
இப்பகுதிகளிலுள்ள 6 நீர்த்தேக்கங்கள் முழுவதுமாக வறண்டிருப்பதால் ஆறுகளிலும் நீர் இல்லை. மராத்வாடா பகுதியிலுள்ள அணைகளில்
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீரின் மட்டம் குறைந்து காணப்படுகிறது. தேங்கிக் கிடக்கும் சுகாதாரமற்ற நீரைப் பயனபடுத்துவதற்கும் கிராம மக்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. லத்தூர் பகுதியில் தண்ணீரைத் தேடி பல கிலோமீட்டர் பயணிக்கும் அவலம் நிலவுகிறது. தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க லத்தூருக்கு 50 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.இப்பகுதிகளிலுள்ள 6 நீர்த்தேக்கங்கள் முழுவதுமாக வறண்டிருப்பதால் ஆறுகளிலும் நீர் இல்லை. மராத்வாடா பகுதியிலுள்ள அணைகளில்
அகமதுநகர் நகருக்கு உட்பட்ட குகடி கால்வாய் வறண்டு போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கால்வாயை நம்பியிருக்கும் பகுதிகளில் 144 தடை உத்தரவுப் போடப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள், சிறிதளவு நீருடன் காட்சியளிக்கும் அந்த கால்வாயை நோக்கி படையெடுக்கின்றனர்.
No comments
Thank you for your comments