Breaking News

பா.ஜ.க. எம்.எல்.ஏ தாக்கிய பொலிஸ் குதிரை 'சக்திமான்' உயிரிழப்பு

உத்தராகண்ட், ஏப்.20-
பா.ஜ.க. எம்.எல்.ஏ தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சக்திமான் என்ற போலிஸ் குதிரை இன்று உயிரிழந்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 7 ஆண்டுகளாக சக்திமான் வெள்ளை குதிரை காவல் துறையில்
பணியாற்றி வருகிறது.

முக்கியமான நிகழ்ச்சிகளின்போது நடைபெறும் காவல் துறை அணிவகுப்பில் இந்த குதிரை பங்கேற்று வந்தது.இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் மாநில அரசுக்கு எதிராக பாஜக சார்பில் அண்மையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி சக்திமான் குதிரையை தாக்கியதில், அதன் கால் முறிந்தது. இந்த விவகாரத்தில், பாஜக எம்.எல்.எ ஜோஷி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜோஷி தாக்கியதில் குதிரையின் இடது பின்னங்கால் முறிந்ததால் உடைந்த கால் அகற்றப்பட்டு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சக்திமான் குதிரை இன்று உயிரிழந்துள்ளது.


No comments

Thank you for your comments