பல்மைரா நகரில் பிணக்குவியல்: சிரியா ராணுவம் அதிர்ச்சி தகவல்
ஐ.எஸ். வசமிருந்து கைப்பற்றப்பட்ட பல்மைராவில் குழந்தைகள் உள்ளிட்டவர்களின்
பிணக்குவியலை சிரியா ராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும்
நிலையில், பெரும்பான்மையான பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் புராதன நகரான பல்மைராவை மீட்க சிரியா ராணுவம், ரஷ்யாவின்
உதவியை நாடியது. ரஷ்யப்படைகளின் இருமுனைத் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல்
பல்மைராவிலிருந்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் பின்வாங்கினர்.
இதனையடுத்து, பல்மைரா நகரம் முழுமையாக சிரிய ராணுவத்தின் கட்டுபாட்டின்
கீழ் வந்தது. இதனிடையே பல்மைரா நகரில் பிணக்குவியல் ஒன்றை சிரியா ராணுவம்
கண்டுபிடித்துள்ளது. 45 நபர்கள் கொண்ட அந்த குவியலில் 23 பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல்கள் உள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
சில உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், எஞ்சிய
உடல்கள் கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய
வந்துள்ளது. பெரும்பாலும் அந்த அந்த உடல்கள் அதிகாரிகள், ராணுவத்தினர், அரசு ஆதரவு
போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினராக இருக்கலாம் என கூறப்படுகிறது. கண்டெடுக்கப்பட்டுள்ள உடல்களை மீட்டு சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹொம்ஸ் நகரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிரியாவின் புராதன நகரான பல்மைராவை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடந்த ஆண்டு
கைப்பற்றி அங்கிருந்த புராதானமான சின்னங்களையும், வரலாற்று சிறப்புமிக்க
கோவில்களையும் தகர்த்தது.
தற்போது பல்மைரா சிரியா ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதை
அடுத்து, சேதமடைந்த புராதனச் சின்னங்கள் மீண்டும் மறுசீரமைக்கப்படும் என
சிரிய தொல்பொருள் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments