பச்சிளம் குழந்தைகளுக்கு சூடு வைக்கும் பெண்: குழந்தைகள் காப்பகத்தில் கொடூரம்
தெலங்கானா, ஏப்.20-
தெலங்கானாவில் அனாதை குழந்தைகளை காக்கும்
இங்கு குழந்தைகளை பார்த்து கொள்ள 6 பெண்மணிகள் வரை பணி செய்கின்றனர். 24 மணி நேரமும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஆட்கள் இருப்பார்கள். இது தவிர ஒருங்கிணைப்பாளர் ஒருவரும் இருப்பார்.
இங்குள்ள அனாதை குழந்தைகளை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், அல்லது குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறவர்கள் என யார் வேண்டுமானாலும் சட்ட ரீதியாக தத்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில், தெலங்கானாவில் உள்ள காப்பகத்தில் பணிபுரியும் ஆயா ஒருவர், இரும்பு கரண்டியை அடுப்பில் சூடாக்கி குழந்தைகள் கைகளில் சூடு போட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோவில், குழந்தைகளை பார்த்து கொள்ளும் ஆயா ஒருவர் அடுப்பில் கரண்டியை சூடாக்கி, இன்னொரு ஆயாவிடம் தருகிறார்.
அந்த பெண், உணவருந்தி கொண்டிருக்கும் பச்சிளம் குழந்தைகள் மீது சூடு வைத்து மிரட்டுகிறார். தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments