தேசமெங்கும் தகிக்கும் வெயில்: தெலங்கானா, ஒடிஷா மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
கர்நாடகா, ஏப்.15-
நாடெங்கும் கோடை வெயிலின் தகிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் வெயில் கொடுமைக்கு இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதன் அண்டை மாநிலமான ஒதிஷாவில் வெயில் காரணமாக 30 பேருக்கு மேல் உயிரிழந்திருக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போலாங்கீர் மாவட்டம் டிட்டாகர் என்ற ஊரில் வெப்பம் 45 டிகிரியை தொட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிஷா மாநிலத்தில் நிலவும் கடும் வெப்பம் இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் வெயிலின் வீச்சு கடுமையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் டெல்லியில் வெப்பம் 41 டிகிரியைத் தொட்டது.

No comments
Thank you for your comments