Breaking News

வெங்காயம் ஒரு கிலோ 30 காசு

மத்திய பிரதேசம், ஏப்.15-
உற்பத்தி அதிகரிப்பால், வெங்காயத்தின் விலை 30 காசு அளவுக்கு குறைந்துள்ளது.

தமிழ்நாட்டிலா என்று கேட்கிறீர்களா?... இல்லை.. மத்திய பிரதேசத்தில்தான் வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அமோக விளைச்சல் காரணமாக, சந்தைக்கு வெங்காய வரத்து
அதிகரித்துள்ளது. ஆனால் தேவை குறைவாக உள்ளது. எனவே விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை ரூ. 15 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 30 காசுக்கு வந்துவிட்டது. இதனால், வியாபரிகள் வெங்காயத்தை குப்பையில் கொட்டும் நிலை வந்துள்ளது.

வெங்காயத்தை , சந்தைக்கு கொண்டு செல்லும் செலவை கூட வியாபாரிகளால் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு உள்ள சந்தைக்கு தினமும்  5 ஆயிரம் மூட்டைகள் வருமாம். ஆனால் தற்போது 4 ஆயிரம் மூட்டைகளே  வந்து உள்ளது. ஆனாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை.

கிலோ ரூ.20 லிருந்து ரூ.30 வரை விற்பனை செய்யலாம் என்று நினைத்திருந்த வியாபாரிகள், இந்த கடும் விலை வீழ்ச்சியால் வேதனை அடைந்துள்ளனர்.

No comments

Thank you for your comments