2 வாரத்திற்குள் பிஎப் பணத்தை எடுத்துவிடுங்கள்: வருகிறது புதிய சட்டம்
58 வயது எட்டினால் மட்டுமே பிஎப் தொகையை திரும்ப பெற முடியும் என்ற புதிய சட்டம் மே 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது.
பழைய விதிமுறையின்படி, ஒரு ஊழியர் நிறுவனத்தில் இருந்து விலகி இரண்டு
மாதங்களுக்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் முழு பிஎப் பணத்தையும் எடுக்கலாம்.பழைய விதிமுறையின்படி, ஒரு ஊழியர் நிறுவனத்தில் இருந்து விலகி இரண்டு
இது வரும் 30ம் தேதி வரை மட்டும்தான். அடுத்த மாதம் 1 ஆம் தேதியில் இருந்து புது விதிமுறை அமலுக்கு வருகிறது.
அதன்பிறகு 58 வயது பூர்த்தியான பிறகுதான் முழு பிஎப் பணத்தையும் எடுக்க முடியும். பிஎப் பணத்தில் இருந்து அத்தியாவசிய தேவைக்கு பணம் எடுப்பது மிக உதவியாக இருந்தாலும், ஓய்வு பெற்ற பிறகு அந்த ஊழியருக்கு சமூக பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது.
சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்தான் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
No comments
Thank you for your comments