Breaking News

இந்த நாள் நிகழ்வுகள் - ஏப்ரல் 20

முக்கிய நிகழ்வுகள்

1534 – இழ்சாக் கார்ட்டியே தனது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவைக் கண்டுபிடித்தார்.
1653 - ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
1657 - அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு மதச் சுதந்திரம் அளிக்கப்பட்டது.
1775 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது.
1792 - பிரான்ஸ், ஆஸ்திரியா மீது போரை அறிவித்தது. பிரெஞ்சு புரட்சிப் போர்கள் ஆரம்பித்தன.
1859 - சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது.
1862 - லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதித்தனர்.
1902 - பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர்.
1914 - ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
1926 - திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்க படைகள் ஜெர்மனியின் லெயிப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்கு அளித்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரத் தந்தை தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
1945 - அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.
1961 - கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் பிக்ஸ் விரிகுடாத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது.
1967 - சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் கொல்லப்பட்டனர்.
1968 - தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆபிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர்.
1972 - அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது.
1978 - தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.
1998 - கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
1998 - 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.
1999 - கொலராடோவில் உயர்தரப் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிதாரி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்.
2007 - டெக்சாசில் ஹூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.

பிறந்த தினங்கள்

1586 - லீமா நகர ரோஸ், பெரு புனிதர் (இ. 1617)
1808 - பிரான்சின் மூன்றாம் நெப்போலியன், பிரெஞ்சு மன்னன் (இ. 1873)
1889 - இட்லர், ஆத்திரிய-செருமானிய போர்வீரர், அரசியல்வாதி, செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1945)
1910 - சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், எழுத்தாளர் (இ. 2006)
1939 - பிரமீள், ஈழத்து எழுத்தாளர் (இ. 1997)
1939 - குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட், நோர்வே பிரதமர்
1945 - தெய்ன் செய்ன், பர்மாவின் 8வது அரசுத்தலைவர்
1947 - அன்வர் இப்ராகீம், மலேசிய அரசியல்வாதி
1950 - நா. சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்

நினைவு தினங்கள்

1918 - கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1850)
1980 - ம. கனகரத்தினம், இலங்கை அரசியல்வாதி (பி. 1924)

No comments

Thank you for your comments