Breaking News

1800 மைல்கள் தாண்டி சென்று தாக்கும் ஏவுகணை: சோதனைக்கு தயாராகும் வடகொரியா

வட கொரியா, ஏப்.27-
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வகையிலான ஏவுகணை சோதனையை வடகொரியா விரைவில் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

வட கொரியா கடந்த ஏப்ரல் 15 தேதி நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட
ஏவுகணையை தற்போது மீண்டும் சோதனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது 4வது அணு ஆயுத சோதனையை கடந்த ஜனவரி 6ம் திகதியும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை பிப்ரவரி 7ம் திகதியும் வட கொரியா நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா மீது ஐ.நா. பொருளாதார தடை விதித்திருந்தது.

எனினும் தனது சோதனையை அந்நாடு தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது புதிய கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணையை சோதித்து பார்க்கவுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 1800 மைல்கள் சென்று தாக்கும் சக்திகொண்ட இந்த ஏவுகணை மூலம் ஜப்பான் நாட்டை வெற்றிகரமாக தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments