இந்த நாள் நிகழ்வுகள் - ஏப்ரல் 01
முக்கிய நிகழ்வுகள்
1793 - ஜப்பானில் உன்சென் எரிமலை வெடித்தை அடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 53,000 பேர் கொல்லப்பட்டனர்.
1826 - சாமுவேல் மோரி உள் எரி பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
1867 - சிங்கப்பூர் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.
1873 - அட்லாண்டிக் என்ற பிரித்தானியாவின் நீராவிக் கப்பல் கனடாவில் நோவா ஸ்கோஷேயில் மூழ்கியதில் 547 கொல்லப்பட்டனர்.
1891 - சிக்காகோவில் றிக்லி நிறுவனம் (Wrigley Company) ஆரம்பிக்கப்பட்டது.
1924 - அடொல்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலை பெற்றார்.
1935 - இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
1937 - யேமனின் ஏடென் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.
1939 - எசுபானிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படைகள் ஜப்பானின் ஒக்கிநாவா தீவுகளில் இறங்கினர்.
1946 - அலூஷன் தீவுகளில் நிகழ்ந்த 7.8 அளவு நிலநடுக்கம் காரணமாக ஹவாய் தீவுகளில் ஆழிப்பேரலை ஏற்பட்டு 157 பேர் கொல்லப்பட்டனர்.
1946 - மலாய் கூட்டமைப்பு உருவானது.
1948 - பரோ தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது.
1949 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனத் தேசியக் கட்சியுடன் பெய்ஜிங்கில் நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தன.
1957 - இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1973 - புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.
1976 - ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniak ஆகியோரால் தொடங்கப்பட்டது.
1979 - ஈரான் 98% மக்கள் ஆதரவுடன் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.
1981 - சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1997 - ஹேல்-பொப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது.
2001 - யூகொஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் சுலோபதான் மிலோசெவிச் போர்க்குற்றங்களுக்காக காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
2001 - நெதர்லாந்து சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.
2004 - கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது.
2006 - ஈரான் மேற்கில் லோரிஸ் டான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 66 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்பு தினங்கள்
1815 - ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க், ஜேர்மனிய அரசியலாளர் (இ. 1898)
1865 - ரிச்சார்ட் சிக்மோண்டி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1929)
1875 - எட்கார் வாலஸ், ஆங்கில எழுத்தாளர் (இ. 1932)
1878 - சி. கணேசையர், ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1958)
1919 - ஜோசப் மறி, நோபல் பரிசு பெற்றவர்
1929 - டி. கே. கோவிந்த ராவ் கருநாடக இசைக் கலைஞர் (இ. 2011)
1933 - குளோட் கொஹென்-டனூட்ஜி, நோபல் பரிசு பெற்றவர்
1940 - வங்காரி மாதாய், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
நினைவு தினங்கள்
1960 - துங்கு அப்துல் ரகுமான், மலேசியாவின் மன்னர் (பி. 1895)
1968 - லேவ் லண்டாவு, நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1908)
1976 - மக்ஸ் ஏர்ண்ஸ்ட், ஜெர்மனிய ஓவியர் (பி. 1891)
2007 - தி. வே. கோபாலையர், தமிழறிஞர் (பி. 1926)
ஏப்ரல் 1: ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட தினம்
இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட நாள் இன்று. 1935 ஆம் ஆண்டு கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி 1949 ஆம் ஆண்டு நாட்டுடமை ஆக்கப்பட்டது. அதற்க்கு முன்னதாகவே அதன் தலைமையகம் 1939 ஆம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது. ரிசர்வ் வங்கியின் கையிருப்பைக் கொண்டே பிற நாட்டு நாணயங்களுக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. பொதுமக்கள் சேவைகளைப் பெற்று வரும் பிற வங்கிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் அதிகாரம் பெற்றது.
1979, ஏப்ரல் 1-ஈரான் இஸ்லாமியக் குடியரசானது
ஈரான் மக்களின் பேராதரவோடு இஸ்லாமியக் குடியரசு தேசமானது. 1978 ஆம் ஆண்டு மன்னராட்சிக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் ஒரு வருடத்திற்கு பின் பலனை தந்தது. மக்களின் கருத்துக்களை கேட்கும் வகையில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 98 சதவீத மக்களின் ஆதரவோடு 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் நாள் ஈரான் இஸ்லாமியக் குடியரசு தேசம் ஆனது. பின்னர் உயர் தலைவருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் வகையிலான அரசியல் சட்டமும் மக்களின் பொது வாக்கெடுப்பிற்கு பின்னரே நடைமுறைபடுத்தப்பட்டது.
ஏப்ரல் 1 - முட்டாள்கள் தினம்
இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாத போதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்க ப்பட்டது எனத் தெரிகிறது.
16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்று தான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.
எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது.
பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
No comments
Thank you for your comments