Breaking News

வெப்சைட்டை ஹேக் செய்ய ஹேக்கர்களுக்கு அழைப்பு விடுத்த பென்ட்டகன்

வாஷிங்டன், மார்ச் 3-
Pentagon invites hackers to attack its websitesஅமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகன் தனது இணையதளத்தை ஹேக் செய்ய வருமாறு ஹேக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகன் தனது இணையதளத்தை யாரும் ஹேக் செய்ய முடியாத அளவுக்கு பலப்படுத்த முடிவு செய்துள்ளது. இதையடுத்து 'ஹேக் தி பென்ட்டகன்'
என்ற போட்டியை அறிவித்துள்ளது.

அதாவது பென்ட்டகனின் இணையதளத்தை ஹேக் செய்ய வருமாறு ஹேக்கர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் ஹேக் செய்து அதில் உள்ள குறைகளை கண்டுபிடித்து கூறினால் அவர்களுக்கு பரிசு அளிக்கப்படும்.

எவ்வளவு பெரிய குறையை கண்டுபிடிக்கிறார்களோ பரிசும் அவ்வளவு பெரிதாக கிடைக்கும். குறைகளை கண்டுபிடித்து சரி செய்துவிட்டால் பென்ட்டகன் இணையதளம் ஹேக் செய்ய முடியாத அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றால் அமெரிக்க அரசின் பிற துறைகளின் இணையதளங்களையும் ஹேக் செய்யும் போட்டி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்களின் இணையதளங்களை யாரும் ஹேக் செய்யாமல் இருக்க ஹேக்கிங் போட்டிகளை நடத்தி வரும் நிலையில் பென்ட்டகனும் அதே போட்டியை நடத்துகிறது.

No comments

Thank you for your comments