Breaking News

துபாயில் அம்மா பிறந்தநாள் கொண்டாட்டம், சிவன் கோவிலில் சிறப்பு ஆராதனை, அபிஷேகம்

Jaya's birthday celebrated in Dubaiதுபாய், மார்ச் 4-
துபாயில் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா பேரவையின் சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் விழா காராமா பகுதியில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு அம்மா பேரவை தலைமை நிர்வாகி கே. சி. சக்திவேல் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் தலைமைக் கழகம் அம்மா பிறந்த நாள் விழாவினை 28-ஆம் தேதி வரை கொண்டாட உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் காரணமாக அமீரகத்தில் இந்த விழா கொண்டாடப்படுவதாக தெரிவித்தார். ஆர். கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பாபு, பாபநாசம் சாகுல் கமீது, எஸ். அசதுல்லா, மந்திரி (எ) ராஜி ஆர். பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் காவிரிமைந்தன், கவிஞர் யமுனாலிங்கம், விஜயராணி ஆகியோர் வாழ்த்தரங்கத்தில் பங்கேற்றனர்.

விழாவில் அம்மா பேரவையைச் சேர்ந்த முருகன், சங்கர், துரைசாமி, ராஜவேல், செல்வகுமார், அருணா, வேல்முருகன், செல்வி சக்திவேல், கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஜி. செல்வக்குமார் நன்றியுரை நிகழ்த்தினார்.

முன்னதாக பர்துபாய் சிவன் கோவிலில் அம்மா பெயரில் சிறப்பு ஆராதனையும், அபிஷேகமும் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

No comments

Thank you for your comments