சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய சாய்னா, சிந்து
சுவிட்சர்லாந்து, மார்ச் 19-
இதில்
மகளிர் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று ஆட்டத்தில் செக்குடியரசின்
கிறிஸ்டினாவை 21–18, 21–17 என்ற நேர்செட்டில் வீழ்த்திய இந்தியாவின்
முன்னணி வீராங்கனை சாய்னா நேஹ்வால்
காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 21–16, 21–16 என்ற
நேர்செட்டில் தைவானின் பாய் யு போவை தோற்கடித்து காலிறுதிக்குள்
அடியெடுத்து வைத்தார்.
ஆடவர் பிரிவு:
ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டத்தில் சீன தைபேயின் ஷூ டின்
ஷென்னிடம் இந்திய வீரர் சாய் பிரனீத் 19–21, 6–21 என்ற நேர்செட்டில் தோல்வி
கண்டு வெளியேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 15–21, 19–21 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் தனோன்சாக்கிடம் வீழ்ந்தார்.
இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 21–13, 21–18 என்ற
நேர்செட்டில் இங்கிலாந்து வீரர் ராஜிவ் டுசெப்பை சாய்த்து காலிறுதிக்கு
தகுதி பெற்றார்.
No comments
Thank you for your comments