Breaking News

சூதாட்ட மோகத்தால் பிஞ்சுக்குழந்தையை விற்ற தாய்

சீனா, மார்ச் 18-
சீனாவில் சூதாட்ட கடனை அடைப்பதற்காக, தனது இரண்டு குழந்தைகளையும் விற்றுள்ள தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மத்திய சீனாவில் உள்ள Heng என்ற இடத்தில் வசித்து வந்த Long Baoxin என்ற பெண்ணுக்கு Su Xiaochun(4), மற்றும் Su Xiaoqiu(2) என்ற இரண்டு பெண் குழந்தைகள்
உள்ளனர்.

சூதாட்டத்தின் மீது அதிக மோகம் கொண்ட இவர், இதன் காரணத்தால் பல நபர்களிடம் கடன் வாங்கியுள்ளார், இதற்கிடையில் இந்த சூதாட்ட பிரச்சனையால் தனது கணவர் பிரிந்து சென்றுவிடவே, இரண்டு குழந்தைகளையும் இவர் வளர்ந்துவந்துள்ளார்.

இருந்தபோதிலும் சூதாட்டத்தை தொடர்ந்து வந்த இவர், ஒரு கட்டத்தில் வாங்கிய கடனை அடைப்பதற்காக, கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Binyang ரயில் நிலையத்தில் வைத்து தனது மூத்த மகளை 9,000 Yuan - க்கு விற்றுள்ளார். அதன் பின்னர், கடந்த 2015 ஆம் ஆண்டு தனது இரண்டாவது குழந்தையை விற்பனை செய்வதற்காக 13,000 Yuan க்கு பேரம் பேசியுள்ளார். 

அதன்படியே குழந்தையை வாங்கவந்த நபரும், பேசியபடி அந்த பணத்தினை அப்பெண்ணிடம் கொடுக்கிறார், தன்னை விற்பனை செய்வதற்காகத்தான் இந்த பணம் கிடைத்துள்ளது என்பது கூட அறியாத அந்த பிஞ்சுக்குழந்தை, அப்பணம் சரியாக உள்ள என சோதனை செய்து, அடுக்கியபடி தனது தாயிடம் கொடுக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை, அக்குழந்தையை வாங்கிய நபர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார், இந்நிலையில் இச்சம்பவம் நடந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தனது இரண்டு குழந்தைகளையும் காணவில்லை என தந்தை பொலிசில் புகார் அளித்ததையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் தாயாரை கைது செய்து பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் மேற்கூறிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின, தற்போது இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், இன்னும் அப்பெண்ணுக்கான தண்டனை விபரம் அறிவிக்கப்படவில்லை.

No comments

Thank you for your comments