பிரிட்டனை எச்சரிக்கும் பிரான்ஸ்!
ஐரோப்பியா, மார்ச் 4-
இந்நிலையில், ஐரோப்பிய
ஒன்றியத்தில் இருந்து
பிரிட்டன் பிரிந்து சென்றால் கடுமையான விளைவுகளை
சந்திக்கக்கூடும் என பிரான்ஸ் பிரதமர் ஹோலண்டே எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ஹோலண்டே கூறியதாவது, Calais எல்லை தொடர்பாக பிரித்தானிய
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம், ஆனால் தற்போது பிரிட்டனில்
நடைபெறவிருக்கும் ஐரோப்பிய யூனியன் தொடர்பான வாக்கெடுப்பு குறித்து
அறிந்தோம்.
பிரிட்டனில் என்ன நடக்கிறது? எதற்காக வாக்கெடுப்பினை நடத்த
வேண்டும்? அவர்கள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்லாமல்
இருப்பதையே அண்டை நாடான நாங்கள் விரும்புகிறோம்.
அப்படி பிரித்தானிய நாடு பிரிந்துசென்றால், பொருளாதாரம் மற்றும்
குடியேற்றம் போன்ற விடயங்களில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று
கூறியுள்ளார்.
பிரிட்டன் குடிமக்களின் நலனுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்
உறுப்பின நாடாக நீடிப்பதையே பிரதமர் கமெரூன் விரும்புகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments