ஆணவக்கொலைக்கு பெருகும் ஆதரவு: சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் தனிப்படை
இந்தியா, மார்ச் 18-
உடுமலையில்
சாதி மாறி கலப்பு திருமணம் செய்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டதற்கு சமூக
வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வெளியான கருத்துகள் சிக்கலை
உருவாக்கியுள்ளது.
உடுமலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை கூலிப்படையினரால் அரிவாளால் வெட்டி படுகொலை
செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் ஆணவக்கொலைக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு
கருத்துக்களை பதிவிட்டு நடந்த சம்பவத்தை பலர் நியாப்படித்தி வந்துள்ளனர்.
மேலும் படுகொலை செய்யப்பட்ட அந்த இளைஞரின் உடல் வெட்டப்பட்ட நிலையில்
பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களிலும் பரவி வருகிறது.
இது சமூகத்தில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது இதுபோன்ற பதற்றத்தை உருவாக்கும் சமூகவலைத்தள கருத்துக்களை கண்காணிக்க தணிப்படை அமைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொதுமக்களும் இதுபோன்ற கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிராமல் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உடுமலை சம்பவத்தில் ஆதரவு கருத்துக்களை பதிவிட்டவர்கள் மீது சைபர்
குற்றவியல் பிரிவு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சில அமைப்புகள் புகார் மனு
அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments