பணம் வாங்க தூண்டும் வகையில் பேசியதாக தேமுதிக பேச்சாளரும், நடிகருமான ராஜேந்திரநாத் மீது வழக்குப்பதிவு!
ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கேளுங்கள் என்று பேசிய தேமுதிக பேச்சாளரும், பிரபல நடிகருமான ராஜேந்திரநாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே கடந்த 19 ஆம் தேதி தேமுதிக தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில், பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் பேசிய தேமுதிக கலை இலக்கிய
அணி செயலர் நடிகர் ராஜேந்திரநாத், அதிமுக, திமுக கட்சிகள் வாக்களிக்க பணம் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றனர். அவர்களிடம் ஒரு ஓட்டுக்கு 5ஆயிரம் ரூபாய் கேளுங்கள் என்று பேசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுக்கூட்டத்தில் வாக்காளர்களை பணம் வாங்க தூண்டும் வகையில் பேசியதாக தேர்தல் பறக்கும் படை உதவி தாசில்தார் சிவகுமார் புகார் அளித்தார். இதன் பேரில் நடிகர் ராஜேந்திரநாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments
Thank you for your comments