பிணைத்தொகை கொடுக்க தவறியதால் சிறுவனை கொன்ற கடத்தல்கார்கள்!
ஐதராபாத்தில்
பத்து கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட 15 வயது சிறுவனை அந்த கடத்தல்
கும்பல் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ஷாகினாயத்கஞ் பகுதியை
சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவனை சிலர் கடத்தி சென்றுள்ளதாகவும், சிறுவனை
விடுவிக்க ரூ.10 கோடி தர வேண்டும் எனவும் அந்த கும்பல் கோரிக்கை
வைத்துள்ளது. இந்த நிலையில் பிணைத்தொகை தர தாமதமானதை அடுத்து அந்த கடத்தல் கும்பல்
சிறுவனை கொலை செய்து அட்டைப்பெட்டிக்குள் வைத்து வெளியே வீசியுள்ளனர்.
சினிமா பாணியில் நடந்துள்ள இந்த கொலையில் தொடர்புடைய நபர்கள்
கடத்தப்பட்ட சிறுவனின் வீட்டில் வேலை செய்து வந்தவர்கள் என கூறப்படுகிறது. கடத்திய நபர்களுடன் சிறுவன் அபாய் இருசக்கர வாகனத்தில் செல்வதை
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
கடத்தப்பட்ட சிறுவனை கொலை செய்த பின்னரும் அந்த கும்பல் பணத்திற்காக அவனது தந்தையை தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சிறுவனின் தந்தை குமார் கடத்தல் கும்பலிடம் பேரத்தில் ஏற்பட்டு
பிணைத்தொகையை 5 கோடிக்கு ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் அந்த கும்பல்
சிறுவனை கொலை செய்துள்ளது.
சிறுவனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் தேடுதல்
வேட்டையில் இறங்கிய போலிசார், செக்கெந்திராபாத்தில் உள்ள ஆல்பா உணவகத்தின்
அருகே சிறுவனின் உடலை கண்டெடுத்துள்ளனர்.
மூன்று பேர் அடங்கிய அந்த கும்பல் குறித்து தகவல் தரும் பொதுமக்களுக்கு
ஒரு லட்சம் வெகுமதி தருவதாக போலிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments