என்ன தகுதி இருக்கு? தேமுதிக-வை தாக்கிய மு.க.அழகிரி
தேமுதிக-வின் மகளிரணி மாநாடு நேற்று நடைபெற்றது. அதில், பேசிய பிரேமலதா விஜயகாந்த், தி.மு.க.என்றால் தில்லுமுல்லி கட்சி என்று தெரிவித்தார், கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார்.
அவரது விமர்சனத்துக்கு திமுக-வை சேர்ந்த யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்நிலையில் தேமுதிக-வின் இந்த விமர்சனத்துக்கு மு.க.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் அவர் கூறியதாவது, விஜயகாந்தின் திருமணத்தை நடத்தி வைத்தவரே கருணாநிதி தான்.
திமுக-வை விமர்சிக்க அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. பேரம் படியவில்லை என்பதால் இப்படி விமர்சிப்பது சரியல்ல. விரைவில் தேமுதிக பாஜவுடன் கூட்டணி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேமுதிக-வின் இந்த குற்றச்சாட்டுக்கு திமுக-வை சேர்ந்த யாரும் பதிலளிக்காமல் இருப்பது வேதனை தருகிறது. ஸ்டாலினின் சர்வாதிகாரம் தான் திமுக-வில் அதிகமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments