Breaking News

மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா : ரோஹித் சர்மா ருத்ரதாண்டவம்

கொல்கத்தா, மார்ச் 11-
டி20 உலகக்கிண்ணப் பயிற்சிப் போட்டியில் இந்தியா 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியாவும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அதிரடியாக விளையாடி 20
ஓவர் முடிவில் 185 ஓட்டங்கள் குவித்து.

அதிகப்பட்சமாக ரோஹித் சர்மா 98 ஓட்டங்கள் (9 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

யுவராஜ் சிங் 31 ஓட்டங்களும், தவான் 21 ஓட்டங்களும் எடுத்தனர். இவர்கள் தலா 3 பவுண்டரி, 1 சிக்சர் விளாசியிருந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில், சுலைமான் பென்னும், ஜெரோம் டெய்லரும் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

இதன் பின்னர் 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்க வீரர்களாக கெய்லும், ஜார்லசும் ஆடினார்கள்.

கெய்ல் 11 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, பிராவோ 13 ஓட்டங்களும், ரசூல் 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் 19.2 ஓவரில் 140 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் சமி, ஜடேஜா மற்றும் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

No comments

Thank you for your comments