மோடியை சந்திக்க ரஜினி முயற்சி: சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக களமிறங்குவாரா?
தமிழக சட்டசபை தேர்தல் நெருக்கி வரும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோரை சந்திக்க நடிகர் ரஜினி நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
ரஜினியை பாஜகவில் சேர்க்க சில மாதங்களுக்கு முன் தீவிர முயற்சி
இந்நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினியின் ஆதரவை பாஜக பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் சங்கர் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘எந்திரன் 2.0’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக டெல்லி வந்துள்ளார் ரஜினி. ஒரு மாதம் அவர் டெல்லியில் இருக்க போவதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு காட்சிகள் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
தற்போது மத்திய அரசு ரஜினிக்கு பத்ம விபூஷன் விருத்து அறிவித்துள்ள நிலையில், அந்த விருது வரும் 28 ஆம் தேதி ரஜினிக்கு வழங்கப்பட உள்ளது. அதற்கு முன்பு பிரதமர் மோடி மற்றும் எல்.கே. அத்வானியை ரஜினி சந்திப்பார் என கூறப்படுகிறது. இவர்களை சந்திக்க நேரம் கேட்டு ரஜினி அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் சந்திப்பு விரைவில் இருக்கும் என கூறப்படுகிறது.
No comments
Thank you for your comments