Breaking News

சுபாஷ் சந்திரபோஸ் தைவான் விமான விபத்தில் இறக்கவில்லை: ஆவணத்தில் தகவல்

டெல்லி, மார்ச் 16-
தைவானில் நடைபெற்ற விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறக்கவில்லை என்று மத்திய அரசிடம் உள்ள ஆவணத்தில் உள்ளது தெரிய வந்துள்ளது. 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து ரகசியமாக பராமரிக்கப்பட்டு வந்த ஆவணங்களை மக்கள் பார்வைக்காக மேற்குவங்க அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது.

ஆவணங்கள் வெளியிடப்படும் நடவடிக்கை தொடர்ந்தாலும், நேதாஜியின்
மரணம் பற்றிய உறுதியான தகவல் வெளியாகாமல் மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேரு பிரதமராக இருந்தபோது பாதுகாப்புத் துறையின் வரலாற்று பிரிவுக்காக கடந்த 1949-50ம் ஆண்டில், ‘இந்திய தேசிய ராணுவம், 1942-45’, எனும் தலைப்பில் ஆய்வாளர் ப்ரதுல் சந்திரகுப்தா என்பவர் தொகுத்து வழங்கிய புத்தகத்தில், விமான விபத்தில் போஸ் உயிருடன் தப்பித்தார் என குறிப்பிடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம் 2011ம் ஆண்டு அதனை யூலை மாத இறுதிக்குள் அச்சிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருந்து இந்த கோப்பு 2011ம் ஆண்டு யூன் 28ம் தேதி அன்று, ‘வெளியில் கசியக்கூடாத வகையில் ரகசியமாக பராமரிக்கப்பட வேண்டிய கோப்பு’, என்ற குறிப்புடன் பாதுகாப்புத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புத்தகம் இன்று வரை அச்சிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments