புதிய கிரிக்கெட் தேர்வு குழுவில் குமார் சங்கக்காரா
விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா தலைமையில் 5 பேர் கொண்ட கிரிக்கெட் தேர்வு குழு ஒன்றை அமைத்துள்ளார்.
தனது ஓய்வினை அறிவித்து ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் குமார் சங்கக்காராவும் இலங்கை அணியின் தேர்வாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரை தவிர ரொமேஷ் கலுவித்தரனா, சுழற்பந்து வீச்சாளர் ரஞ்சித் மதுரசிங்க மற்றும் லலித் களுபெரும ஆகியோரும் இத்தேர்வு குழுவுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் டி20 உலகக்கிண்ணத் தொடரை கருத்தில் கொண்டும், கடந்த காலங்களில் நியூசிலாந்து, இந்தியா, ஆசியக்கிண்ணம் போன்ற சுற்றுப்பயணங்களால் இலங்கை அணிக்கு ஏற்பட்ட தோல்விகளாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
No comments
Thank you for your comments