மீண்டும் புதுப்பொலிவுடன் நமது எம்.ஜி.ஆர் இணையதளம்... ஜெ. தொடங்கி வைத்தார்
புதிய பொலிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) அதிகாரப்பூர்வ நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆரின் இணையதளத்தை www.drnamadhumgr.com முதல்வர் ஜெயலலிதா இணையதளத்தை இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் இணையதள சேவையை தொடங்கிவைத்தார். www.drnamadhumgr.com என்ற முகவரியில் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் அனைத்து செய்திகள் மற்றும் கட்டுரைகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று வருகின்றன.
நமது எம்.ஜி.ஆர்.இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக கூறி கடந்த சில மாதங்களாகவே அந்த இணையதளம் புதுப்பிக்கப் படாமேலேயே இருந்தது. இந்த நிலையில், நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் இணையதளம் புதுப்பொலிவுடன், பல்வேறு புதிய தகவல்களுடன் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா இன்று நமது எம்.ஜி.ஆர். இணையதளத்தை www.drnamadhumgr.com தொடங்கி வைத்தார். புதுப்பிக்கப்பட்டுள்ள நமது எம்.ஜி.ஆர். இணையதளத்தில் அதிமுக தொண்டர்களும், இணையவாசிகளும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் தெளிவாக அறிந்துக் கொள்ளும் வகையில், இணையதள பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.
இந்த இணையதளத்தில், தலைப்புச் செய்திகள், முக்கியச் செய்திகள் மட்டுமல்லாது, அ.இ.அ.தி.மு.க. அறிக்கைகள், ஜெயலலிதாவின் முக்கிய அறிவிப்புகள், அரசின் திட்டங்கள், முதலமைச்சரின் சாதனைகள் மற்றும் கட்டுரைகள் உள்ளிட்டவை புதிய வடிவில் இடம்பெற்றுள்ளன. மேலும், பஞ்ச் கார்னர், அறிவோம் அறிவியல், ஜோதிடம், விளையாட்டு, சித்திர குப்தன், வாழ்த்துகள், வீடியோ, புகைப்படம், இ.பேப்பர் ஆகியவற்றுக்கு நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் புதிய இணையதளத்தில் தனித்தனி லிங்க்குகள் அளிக்கப்பட்டு, அவற்றை அனைவரும் எளிதில் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இ பேப்பர் எளிதல் தரவிறக்கும் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments