தேர்தல் பறக்கும் படையினர் சோதனை - 5 மாநிலங்களில் இதுவரை ரூ.32 லட்சம் பறிமுதல்
டெல்லி, மார்ச் 31-
தேர்தலை ஒட்டி இதுவரையில் நடத்தப்பட்டுள்ள வாகன சோதனையில் 5மாநிலங்களிலும் கிட்டதட்ட ரூபாய் 31 கோடி சிக்கியுள்ளதாக தமிழ்நாடு,
மேற்கு வங்காளம், அசாம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களில்
சட்டசபை தேர்தல் ஏப்ரல் 4 முதல் மே 16 வரை நடைபெறும் என தேர்தல் கமிஷன்
கடந்த 4 ஆம்
தேதி அறிவித்தது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 மாநிலங்களிலும் வாக்காளர்களுக்கு அரசியல்
கட்சிகள் பணம் கொடுத்து சட்டவிரோதமாக வாக்குகளை பெறுவதை கட்டுப்படுத்தவும்
கருப்பு பண நடமாட்டத்தை கண்காணிக்கவும் மத்திய நிதி அமைச்சகத்தில் உள்ள
பல்வேறு அமைப்புகள் மூலம் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் 5
மாநிலங்களிலும் பறக்கும் படையை தேர்தல் கமிஷன் அமைத்து, அதனை தடுக்கும்
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.31
கோடியே 83 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் ரூபாய் 15 கோடியே 19 லட்சம் சிக்கி உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்காள மாநிலத்தில் ரூபாய் 5 கோடியே 64 லட்சம்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அசாமில் ரூபாய் 5 கோடியே 43 லட்சமும், கேரளாவில் ரூபாய் 5 கோடியே 27
லட்சமும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ரூபாய் 30 லட்சமும் மொத்தம்
ரூபாய் 31 கோடியே 83 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து
உள்ளனர்.
No comments
Thank you for your comments